சாரண – சாரணியர் இயக்க வைரவிழா பிரம்மாண்ட ஏற்பாடு

0 435
Stalin trichy visit

திருச்சி, ஜன.23  பாரத சாரண, சாரணியர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் முடிவடைவதை முன்னிட்டு அதன் வைரவிழா தேசிய திரளணியாகவும் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி விழாவும் திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இம்மாதம் 28 ம் தேதி முதல் பிப்ரவரி 3 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கலைஞர் பெயரில் இந்த ஜாம்புரி நிகழ்வு நடைபெறுவதால் தமிழகத்திற்கு அவர் செய்த சாதனைகளை விளக்கிடும் வகையில் கண்காட்சி அரங்கம் அமைய இருக்கிறது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
இங்கேயே அவர்கள் ஏழு நாட்கள் தங்கி இருந்து காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து நிகழ்வுகளிலும் சாரண சாரணியர் மாணவர்கள் பங்கேற்பார்கள். இதனால் சாரண, சாரணியர், ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்கள் தங்குவதற்கும் அலுவலகப் பணிக்கு என 2500 க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தயாராக உள்ளது. அனைவருக்கும் தேவையான மருத்துவம் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்தும் மாணவர்கள் இந்த ஜாம்பூரி நிகழ்வில் பங்கேற்பார்கள். இவர்களுக்கு நோடல் ஆபீஸர்ஸ் எனப்படும் இருவர் இவர்களுடன் இருப்பார்கள். இது மட்டுமில்லாமல் அனைத்துப்பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் 350 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் வகையில் காவல் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் மிகப்பெரிய அளவில் இந்த 75வது வெள்ளி விழா ஆண்டு பெருந்திள் பேரணி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் 356 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சமையலறை கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமாராக 74 சமையலறை கூடங்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதேபோல் ஸ்டேடியம் வடிவில் கேலரியுடன் கூடிய விழா திறந்தவெளி அரங்கு மற்றும் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. சமையலுக்கு தேவையான அனைத்து காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை பாத்திரங்களை அவர்கள் இங்கே பெற்றுக் கொள்ளலாம் அதற்கான சமையல்கள் அவர்கள் மாநிலத்திலிருந்து வருவார்கள் என குறிப்பிட்டுள்ளனர். அடிப்படை வசதிகளுடன் 2500 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 50 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ளவர்களுக்காக கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவதற்கு தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக செல்போன் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை பங்கேற்க உள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் போன்ற நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் விதமாக பண்டைய தமிழர்களின் வாழ்விடங்களின் கற்குகை தொடங்கி கல்வீடு, பனை ஓலை, சுவருடன் வீடு, ஓடு பதிந்த வீடு, கான்கிரீட் வீடு கலைஞர் வீடு என 2100 ம் ஆண்டில் வீடுகள் எவ்வாறு இருக்கும் என்பது விளக்கும் விதமாக மாதிரி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பண்டைய தமிழர்கள் காலம் தொட்டு தற்போது வரை மக்கள் பயன்படுத்தி வரும் மண்பானை, ஆட்டுக்கல், அம்மிக்கல், கல்உரல், கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட நாகரீக வளர்ச்சிக்கு அடையாளத்தையும் காட்சி படுத்தும் பணியில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.

அதேபோல் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடத்தப்பட்ட கலை இலக்கிய திருவிழாவின் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்த மாணவர்கள் தங்களது கைவண்ணத்தில் யானை, குதிரை, ஜல்லிக்கட்டு காளை, வாடிவாசல்களையும் திறம்பட செய்து வருகின்றனர். தங்களுக்கு வாய்ப்பு அளித்த தமிழக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்து துறைக்கும் அவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், வீரம், விளையாட்டு, கல்வி உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ளும் விதமாக அனைத்து ஏற்பாடுகளும் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. என ஆசிரியர்கள் தெரிவித்தனர். விழா ஏற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, மின்வாரியம், பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் இரவுபகலாக செய்து வருகின்றனர்.
முக்கிய விருந்தினர்கள் வரும் வருகை குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக் கல்வித்துறை செய்து வரும் நிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் விழா ஏற்பாடு பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்பாடுகளை பார்வையிட்டு பணிகளை விரைவாக நடத்தி முடிக்க அதிகாரிகளுடன் ஆலோசனையில் வழங்கி வருகிறார்.
350 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக விழா நடைபெற உள்ள நிலையில் அரசு அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.