ஜெயலலிதா பிறந்தநாள் விழா கிரிக்கெட் போட்டி

0 357
Stalin trichy visit

திருச்சி, பிப். 24  திருச்சி மாவட்டம் முசிறி துறையூர் சாலையில் உள்ள உள்விளையாட்டு அரங்கில்முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின்77 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

டர்பில் நடைபெற்ற எட்டு பேர் கொண்ட கிரிக்கெட் போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள்பங்கு பெற்றன.5 ஓவர்கள் அடிப்படையில்போட்டிகள் நடைபெற்றது.முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரத்து எட்டு மற்றும் சுழற் கோப்பையை முசிறி எம்சிசி அணியினரும், இரண்டாம் பரிசு ரூபாய் 7,002மற்றும் சுழற் கோப்பையை 11 பிரதர்ஸ் மகேந்திர மங்கலம் அணியினரும் ,மூன்றாம் பரிசு ரூ 5004மற்றும் சுழற் கோப்பையை முசிறி டைகர் பாய்ஸ் அணியினரும், நான்காம் பரிசு ரூ 3006மற்றும் சுழற் கோப்பையைஏ சி சி அயித்தாம்பட்டி அணியினரும்வென்றனர். சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த மட்டையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவிற்கு முசிறி நகரச் செயலாளர் எம் கே சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆனந்த் ,நகர மாணவரணி செயலாளர் மதன்,14வது வார்டு செயலாளர் கே ஆர் டி ரவிச்சந்திரன், வர்த்தக அணி செயலாளர் ராஜ்குமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வெற்றி பெற்ற அணியினருக்கு முசிறி ஒன்றிய செயலாளர் எம்.கே. ராஜமாணிக்கம்,முன்னாள் அமைச்சர் அண்ணாவி மற்றும் முன்னாள் எம்எல்ஏ மல்லிகா சின்னசாமிஆகியோர் பரிசுகளை வழங்கினர்.இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்குட்டி (எ)ஜெயசீலன்,வழக்கறிஞர்கள் பாரதிராஜா, பத்ம ராஜாமற்றும் கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.