திருச்சி விமான நிலையத்தில் ரூ. 70.71 லட்சம் தங்கம் பறிமுதல்

0 198
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 21  சார்ஜாவிலிருந்து பயணியொருவர் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.70.71 லட்சம் மதிப்பிலான 780 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வியாழக்கிழமை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் ஆண் பயணியொருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரிடம் தனியாக விசாரணை மேற்கொண்டதில், அவர் பசை வடிவிலான 780 கிராம் தங்கத்தை அடிவயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 70.71 லட்சமாகும். இதனையடுத்து சுங்கத்துறையினர்  தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.