அம்மா மண்டபம் பகுதியில் மூதாட்டி உடல் மீட்பு
திருச்சி மார்ச் 21 திருவரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இறந்த நபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் வெள்ளி முத்தம் கிராம நிர்வாக அதிகாரி மாணிக்கம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.