தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேச்சுப் போட்டி
திருச்சி, மார்ச் 22 திருச்சியில் தெற்கு மாவட்ட , மாநகர திமுக இளைஞரணி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவின் தொடர்ச்சியாக திருச்சி பப்ளிக் ஸ்கூல் காட்டூரில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவீந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் வெங்கடேஷ்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திராவிடப் பண்ணை முத்து தீபக் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே என் சேகரன், ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். நிறைவாக மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சையத்சாகிப் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், விஜயகுமார் மாவட்ட மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பெர்னாட் சாமிநாதன், R.அல்லா பிச்சை, Kcp விஷ்ணு வரதன், KM.கண்ணன், M.ரஞ்சித்குமார், S.சரத்குமார், R.பார்த்தசாரதி மற்றும் மாவட்ட மாநகர கழகங்களில் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.