தொகுதி மறு சீரமைப்பு விவகாரம்: பா.ஜ.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

0 240
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 22  தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பாக கருப்பு சட்டை மற்றும் கருப்பு கொடி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து மற்றும் கருப்பு கொடி ஏந்தி திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் திமுக ஆராய்ச்சி பொய் நாடகம் நடத்துகிறது. தொடர்ந்து திமுக அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. காவேரி போடும் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார்  வரவேற்காதே என கோசங்கள் எழுப்பப்பட்டது. கேரளாவில் இருந்து தமிழ்நாடு எல்லை பகுதிகளில் கழிவுகளை கொட்டும் கேரளா அரசு கண்டிக்காத திமுக அரசு தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்து வரும் நடவடிக்கையை கண்டு கொள்ளாத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசியது:

தமிழ்நாடு விவசாயிகளுக்கு துரோகம் செய்து  அவர்களின்  வாழ்வாதாரத்தை முற்றிலும் ஒழிக்க கூடிய செயல்களில் கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் செயல்பட்டு வருகிறது ஒருபோதும் இதை திமுக அரசு தட்டிக் கேட்கவில்லை. தொடர்ந்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்களில் நடத்தினாலும் இதற்கு தமிழ்நாடு அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

மேலும் தொகுதி மறு சீரமைப்பு குறித்த விவகாரத்தில் திமுக அரசு வேண்டும் என்று பொய் நாடகம் நடத்தி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ளார். அதேசமயம் தொகுதிகள் குறைக்கப்பட்டால் தமிழ்நாடு பாஜக ஏற்றுக்கொள்ளாது எனவும் மாநில தலைவர் அண்ணாமலை தெளிவாக கூறியிருக்கிறார். ஆனால் தற்போது தொகுதி மறுசீரமைப்பு குறித்து திமுக அரசு போய் நாடகம் நடத்தி வருகிறது என குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவருமே திமுக அரசின் அடிமையாகவும் திமுக மாவட்ட செயலாளர்களின் ஏவல்துறையாகவும் செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெறும் திமுக அரசு அகற்றப்படும் என கூறினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர பாஜக தலைவர் ஒண்டி முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.