காப்பர் வயர்கள் திருடிய சிறுவன் கைது
திருச்சி மார்ச் 22 திருச்சி மேல சிந்தாமணி மாதுளம் கொள்ளை தெருவை சேர்ந்தவர் அம்ஜத் கான் (வயது 43).இவர் வீட்டில் கிடந்த காப்பர் வயர்களை மர்ம நபர் திருடி சென்று விட்டார் .இது குறித்து அம்ஜத் கான் கோட்டை போலீசில் புகார் அளித்தார்.புகாரியின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.இன்னிலையில் காப்பர் வயர்களை திருடியதாக அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.அவனிடமிருந்து காப்பர் வயர்களை பறிமுதல் செய்த போலீசார் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.