பி.எஸ்.என்.எல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

0 287
Stalin trichy visit

திருச்சி மார்ச் 22 திருச்சி வடக்கு தாராநல்லூர் அம்மன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டு முத்து. இவரது மகன் கனகராஜ் (வயது 27) பி.எஸ்.என்.எல். டவர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒன்பது மாதங்கள் ஆகிறது. இவரது மனைவி தனலட்சுமி (வயது 22). தனலட்சுமி பியூட்டி பார்லர் பணி செய்து வருகிறார். கனகராஜ் செல்போனில் ரம்மி விளையாடும் பழக்கத்தை கொண்டிருந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மனைவி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் பார்த்தபோது கனகராஜ் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து தனலட்சுமி காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்கு பதிந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.