உலக ஆட்டிஸம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

0 232
Stalin trichy visit

திருச்சி, ஏப்.2  திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக புறவுலக சிந்தனையற்றோர் (ஆட்டிஸம்) தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்தின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அதியமாசன் கவியரசு, தமிழ்நாடு உரிமைகள் திட்ட உதவி செயல்படுத்தும் அலுவலர் ரமேஷ், ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டியின் மேலாண்மை இயக்குநர் இமானுவேல் பிரபாகர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுரேந்தர், பிரபாகர், தன்னார்வ தொண்டு நிறுனங்களின் பிரதிநிதிகள், சிறப்பு பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.