வ.வே.சு.அய்யர் பிறந்தநாள் : மாவட்ட ஆட்சியர் மரியாதை
திருச்சி, ஏப்.2 சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு.அய்யர் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி வரகனேரியில் உள்ள அவரது நினைவில்லத்தில் வ.வே.சு. அய்யர் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மலர்தூவி மரியாதை செய்தார். உடன் வருவாய் கோட்டாடசியர் அருள், மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார், கிழக்கு வட்டாட்சியர் சக்திவேல் முருகன், மாநகராட்சி உதவி ஆணையர் சாலை தவவளன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சுதாகர், கிளை நூலகர் செந்தில்குமார், வாசகர் வட்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் உள்ளனர்.