டாஸ்மாக் காசாளரிடம் பணம் பறித்த ரவுடி கைது

0 192
Stalin trichy visit

திருச்சி, ஏப்.2 திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 55. ) தென்னூர் டாஸ்மாக்கில் காசாளராக வேலை செய்து வருகிறார். நேற்று கடையில் இருந்தபோது அங்கு வந்த தென்னூர் வாமடம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இவர் தர மறுக்கவே விக்னேஷ் அவரது சட்டை பையில் இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அரிவாளை கட்டி மிரட்டி பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்து யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து சரித்திர பதிவேடு ரவுடியான விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ.500 பணம் மற்றும் ஒரு அரிவாளை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.