சிறுவனை தாக்கிய வாலிபர் கைது
திருச்சி, ஏப் 2 திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவருக்கும் வரகனேரி ரம்பகார தெருவை சேர்ந்த சிவகுமார் (வயது 23), வரகனேரி சந்தனபுரத்தைச் சேர்ந்த இம்ரான் கான் (வயது 20) மற்றும் சதீஷ் ஆகியோருடன் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த 3 பேரும் நேற்று 17 வயது சிறுவனின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அவரை கம்பி மற்றும் கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சிறுவன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து இம்ரான் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருடன் இருந்த சிவகுமார் மற்றும் சதீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.