கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்து கொத்தனார் உயிரிழப்பு

0 231
Stalin trichy visit

திருச்சி, ஏப் 2 திருச்சியை அடுத்த மணப்பாறை, மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 45) கொத்தனார். கடந்த 1.5 ஆண்டுகளாக எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளி கட்டுமான பணிகள் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 27ந்தேதி வேலையின் போது பாக்யராஜ் 20 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று பாக்யராஜ் சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சீதாமேரி அளித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.