அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பெண் மாயம்
திருச்சி, ஏப் 2 திருச்சி மாவட்டம் முசிறி மாவாலிப்பட்டி, மேற்கு தெருவை சேர்ந்தவர் ஆசைதம்பி (63) இவரது மகள் அங்கம்மாள் (38) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்கள் மார்ச் 31ஆம் தேதி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை வந்துள்ளனர். அப்போது அங்கம்மாளை அங்குவிட்டு ஆசைதம்பி உணவு வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அங்கம்மாள் மாயமானார். இது குறித்து ஆசை தம்பி அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து அங்கம்மாளை தேடி வருகின்றனர்.