சரடமங்கலம் கிராமத்தில் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா
திருச்சி, ஏப்.7 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் சரடமங்கலம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தருமாறு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் எம்.பி. ஜி.கே. வாசனிடம் கோரிக்கை விடுத்தார்.
இக் கோரிக்கையை ஏற்று ரூ 10 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான பணிகளை தமாகா மாவட்டத் தலைவர் KVG ரவீந்திரன், தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.தமாகா நிர்வாகிகள் தியாகராஜன், சிவப்பிரகாசம், மருதநாயகம்,சுகன், செல்வகுமார்,ஊர் பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.