சிறுமி பாலியல் பலாத்காரம் – திருச்சி வாலிபர் போக்சோவில் கைது!
மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் திருச்சி துறையூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வகுப்பில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் துறையூர் பகுதியை சேர்ந்த சிறுமியின் தூரத்து உறவினரான கோபிநாத்(22) என்பவர் பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சிறுமியின் செல்போன் வாங்கி பேசி வந்துள்ளார். இந்த நிலையில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவி மேட்டுப்பாளையம் சென்றுள்ளார். இதற்கிடையே கோபிநாத் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார்.
சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த போது அவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. அப்போது அங்கே வந்த சிறுமியின் தந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிறார் பாலியல் பலாத்கார பிரிவு (போக்சோ) சட்டத்தில் கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.