ஒரத்தூர் அரசு மருத்துவமனையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருச்சி, ஏப்.9 ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் பெயர்ந்து விழும் நிலையிலுள்ள மேற்கூரை சிமென்ட் காரைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கூரையின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது.சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஒரத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். சுற்று வட்டார பொதுமக்கள் தங்கது மருத்துவ தேவைகளை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த மருத்துவமனையின் பிரசவ வார்டில் உள்ள மேற்கூரை
மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுந்தது கர்ப்பிணி பெண்கள் மேலே விழுகிறது.
எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கூரைகளை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி கிராம பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்தனர்.