லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் பங்குனிதேரோட்டம்

0 327
Stalin trichy visit

திருச்சி, ஏப்.9  லால்குடி  அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் பங்குனிதேரோட்டம்
திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், இந்தாண்டு பங்குனி தேரோட்டத்திற்கான கடந்த மார்ச் 28 ஆம் தேதி
முகூர்த்தக்கால் பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு பெரிய தேர் மீது
முகூர்த்தக்கால் நடப்பட்டது.அதனைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி தேரோட்ட திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் காலை 8 மணி அளவில் சோமாஸ்கந்தர் அம்பாள்சுவாமி எழுந்தருளி கலை நயமிக்க 75 அடி உயரமுள்ள மிகப் பழமையான மரத்தாலான அழகு நயமிக்க தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்படித்தனர்.
தேரோட்ட விழாவில் லால்குடி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுந்தரி, குருக்கள் தேஜோவிடங்க உட்பட கோயில் பணியாளர்கள்செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.