திமுக மாணவர் அணி சார்பில் இல்லம் தேடி மாணவர் சேர்க்கை

0 397
Stalin trichy visit

திருச்சி, ஏப்.12  திமுக மாணவர் அணி சார்பில் இல்லம் தேடி மாணவர் சேர்க்கை  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு க ஸ்டாலின்உத்தரவின் பேரில் திமுக மாணவர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் மாவட்ட மாநகர மாணவரணி சார்பில் தொகுதிக்கு ஆயிரம் மாணவர்களை சேர்க்க வேண்டும் எனும் இலக்கில்

முதற்கட்டமாக திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட மாணவரணி திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாங்குடியில் மாணவரணி சார்பில் இந்த மாணவர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

மேலும் இதில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் தமிழக பள்ளிகல்விதுறைஅமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வீடு வீடாக சென்று அங்குள்ள மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடி மாணவர் அணி படிவம் வழங்கப்பட்டு அதில் அவர்களது படிப்பு மற்றும் வயதுவரம்பு குறிப்பிடப்பட்டு அவர்களிடம் கையொப்பம் பெற்று மாணவரணி சான்றிதழ் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் மண்ணை சோழராஜன் மற்றும் திருவரம்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் மற்றும் மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஹரிஹரன் ,ஸ்ரீநிதி சதீஷ்குமார், கண்ணன் உட்பட மாணவரணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.