மணப்பாறையில் திமுக சார்பில் அகில இந்திய அளவிலான கபாடிப் போட்டி

0 298
Stalin trichy visit

திருச்சி, ஏப். 26  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலைஞர் விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு மணப்பாறை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அகில இந்திய அளவிலான கபாடி போட்டி நேற்று இரவு தொடங்கி ஞாயிற்றுகிழமை வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் ராமாசாமி தலைமையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்றுள்ளன. இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் ஆண்களுக்கான லீக் சுற்று ஆட்டங்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போலீஸ், டிஎம்சி தானே, கட்டக்குடி, ராய் ரைபிள் டெல்லி, சிட்டி போலீஸ் சென்னை, தமிழ்தலைவாஸ் உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின. கபாடி போட்டியை ஆயிரக்கணக்கான கபாடி ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.