கள்ள நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டவர் கைது
திருச்சி, ஏப். 30 திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதாண்டகுறிச்சி ஆளவந்தான் நல்லூர் தெரு பகுதியில் வசித்து வருபவர் அனி பவுல்ராஜ் (வயது 50) அவ்வப்போது மருத்துவப் பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
பணத்தின் மீது உள்ள ஆசை காரணமாக தாமாகவே பணத்தை அச்சிட்டு கடந்த சில மாதங்களாக பணத்தை புழக்கத்தில் விட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவரது தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளது. வேலைக்கு ஏதும் சொல்லாமல் பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விட்டால் ஆடம்பரமாக வாழலாம் என்ற நோக்கில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சோமரசம்பேட்டை மற்றும் மாநகர பகுதியில் கள்ள நோட்டுப் புழக்கம் பரவி வருவதாக திருச்சி மாவட்ட SP செல்வ நாகரத்தினம் உதவி எண்ணிற்கு வந்த தகவலின் படி, உதவி ஆய்வாளர் வேலழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் ரகசியமாக கண்காணித்து வந்த போது, இன்று காலை அனி பவுல்ராஜ் சுற்றிவலைக்கப்பட்டு அவரை சோதனை செய்தபோது, அவர் சட்டை பையில் நான்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகளும், பையில் நிறைய கள்ள நோட்டுகளும் இருந்துள்ளது.
தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து கலர் பிரிண்டர், ஸ்மார்ட் போன், வெள்ளை பேப்பர், கலர் இங்க், மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 65 உள்ளிட்ட அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மல்லியம்பத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அணி பவுல்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.