பொய்வழக்கில் முன்னாள் அமைச்சரை கைது செய்த தவெக அரசைக் கண்டித்து மணப்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, அக்.27 பொய்வழக்கில் முன்னாள் அமைச்சரை கைது செய்த தவெக அரசைக் கண்டித்து மணப்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைத் கண்டித்து இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே திமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொய்வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், பழிவாங்கும் நோக்கில் தவெக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமாகவும் ஆட்சி நடத்த தெரியாத அரசாக உள்ள தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட அவைத்தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக செயற்குழு உறுப்பினர் சபியுல்லா, மணப்பாறை நகர செயலாளர் மு.ம.செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி, வையம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் சீரங்கன், ராஜேந்திரன், மருங்காபுரி ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி, செல்வராஜ், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ண கோபால், மாவட்ட அணி அமைப்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் உளாளிட்ட மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, துவரங்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.