மேல வாளாடியில் புதிய சூப்பர் மார்க்கெட் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

0 522
Stalin trichy visit

திருச்சி, மே 5  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேல வாளாடியில் புதிய சூப்பர் மார்க்கெட்டை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

மேலவாளாடி,புதுசத்திரத்தில் உள்ள குரு காம்ளக்ஸ் வளாகத்தில் திருச்சி எஸ்.கே.எம் சூப்பர் மார்க்கெட் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைப்பெற்றது.இந்த புதிய சூப்பர் மார்க்கெட்டை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.
திறப்பு விழாவை முன்னிட்டு 04-05-2025 முதல் 11-05-2025 வரை உங்கள் வீட்டிற்கு தேவை மளிகை பொருட்கள் காம்போ பேக்கேஜில் ரூ. 3000 மதிப்புள்ள பொருட்கள் வெறும் ரூ. 2500 மட்டுமே. மேலும் ரூ.1000, 2000, 3000, 5000 க்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என சூப்பர் மார்க்கெட் கடையில் உரிமையாளர்கள் பழனிச்சாமி பானுப்பிரியா தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், சண்முகநாதன், லால்குடி நகர் மன்ற தலைவர் துரைமாணிக்கம், முன்னாள் சேர்மன் ரவிச்சந்திரன், அப்பாதுரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.