நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச்சிலை : முதல்வர் திறந்து வைத்தார்
திருச்சி, மே 8 திருச்சி புத்தூர் பகுதியில் நிறுவப்பட்டு உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அருகில் சிவாஜி குடும்பத்தினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.