திருச்சியில் முதல்வரின் ‘சாலையில் மக்கள் சந்திப்பு’
திருச்சி, மே. 9 திருச்சியில் முதல்வரின் ‘சாலையில் மக்கள் சந்திப்பு’ (Road Show ) நேற்று நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று திருச்சிக்கு வருகை தந்தார்.
காலையில் துவாக்குடி மாதிரி பள்ளியை திறந்து வைத்த முதல்வர். பின்னர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்தார். பின்னர் மாலையில் தபால் அஞ்சல் அலுவலகத்திலிருந்து ரோட் ஷோ நடத்தி மக்களை சந்தித்து அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தொண்டர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அதனைத் தொடர்ந்து தில்லை நகர் கரூர் சாலை வழியாக கலைஞர் அறிவாலயம் சென்று அங்கு திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.