திருவெறும்பூரில் 2000 பேருக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

0 478
Stalin trichy visit

 திருச்சி ஜுன் 4 திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 2000 ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டாக்களை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று  வழங்கினார்.

தமிழக முதல்வர் கடந்த மாதம் 9ம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்க விழாவில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 54,000 ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 1201 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசியதாவது

தமிழக மக்களை பெரிதும் நேசிக்கும் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழாவில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 2000 த்திற்கும் மேற்பட்டோருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்குவது அவருக்கு புகழ் சேர்ப்பதாகும்.

கையளவு நிலம் இருந்தாலும் அது சொந்த நிலமாக இருக்க வேண்டும் என எல்லோரும் நினைப்பார்கள் தற்பொழுது வீட்டுமனை பட்டா வழங்கியவர்களில் தகுதியானவர்களை கண்டறிந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வீடு கட்டி தரப்படும் என்றும் மேலும் நீதிமன்ற குறுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் வீட்டுமனை பட்டா வழங்க முடியாதவர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்றும் உங்களை பாதுகாப்போம் உங்கள் ஆனந்தத்தோடு தற்பொழுது நானும் ஆனந்தமாக கலந்து கொள்கிறேன் என்றார்.

திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது.

திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் 1200 பேருக்கு வீட்டு மனை பட்டா பட்டுள்ளது.  ஒரு மனிதனின் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியம் வீட்டு மனை பட்டாவாகும். பல ஆண்டுகளாக வசித்து வந்து பட்டா கிடைக்காதவர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படுகிறது.

பட்டாக்கள் இரண்டு வகையில் வழங்கப்படுகிறது.

நகரப்பகுதியில் நீண்ட நாட்களாக கட்டடம் கட்டி வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வாடகை வீட்டில் இருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி தமிழக முதல்வர் 54 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனை தொகுதி வாரியாக சென்று பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது திருவெறும்பூர் தொகுதிக்கு மட்டும் 10 ஆயிரத்து 200 பட்டாக்கள் வழங்கப்படுவதாகவும் இதில் தற்பொழுது ஆயிரத்து 200 பேருக்கு பட்டா வழங்கப்படுவதாகவும் மேலும் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும்மக்கள் உள்ளிட்டோருக்கு என மொத்தம் திருவெறும்பூர் தொகுதியில் 11,300 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுவதாகவும் .

இதனை நேரிடையாக சென்று வழங்க வேண்டும் பட்டா வழங்குவதில் காலதாமதம் கூடாது என்பதற்காக தான் இது போல் நேரிடையாக மக்களை சந்தித்து வழங்கப்படுவதாகவும் இந்த பட்டாக்களை தங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வழங்குகினார். இவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு அடுத்த கட்டமாக கட்டுவதற்கு தகுதி உடையவர்களைகண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் 4 ஆயிரம் கலைஞரின் கனவு இல்ல வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது இந்த ஆண்டு 4 ஆயிரத்து 300 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்டா பெற்றவர்கள் தங்களுக்கு தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வீட்டுமனையில் கலைஞரின் கனவு இல்ல வீடு கட்டி கொடுக்கப்படும் எந்த ஒரு திட்டமும் மக்களின் இடம் சேர வேண்டும் என்றால் அது நேரிடையாக கொண்டு சேர்க்கும் பொழுது தான் முழுமை பெறுகிறது.

இந்தியாவில் தமிழகத்தில் தான் 772 வகையான திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த பட்டா வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக வழங்கப்படும். பட்டா கிடைக்கப்பெறவில்லை என வருந்துபவர்கள் நீர்நிலைகளில் 50 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தாலும் கோவில் இடத்திலோ, ரயில்வே இடத்திலோ குடியிருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்க முடியாது. ஆனால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி அதற்கு பட்டா கொடுக்கப்படும் தகுதியான நபர்கள் ஒருவர் கூட விட்டு விடக்கூடாது என்று கருத்தில் கொண்டு தற்போது பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த விழாவில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி,  கோட்டாட்சியர் அருள், திருவெறும்பூர்வட்டாட்சியர் செயபிரகாசம் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் துவாக்குடி நகராட்சியின் நடந்த இலவச வீட்டு மனை பட்டாவழங்கும் விழாவில் 316 பயணாளிகளுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பட்டாக்களை வழங்கினார். இந்த விழாவில் நகராட்சி தலைவர் காயம்பு, உதிர் பேரூராட்சி துணைத் தலைவர் பழனியாண்ட்டி பேரூராட்சி செயலாளர் தங்கவேல் மற்றும் அரசு அதிகாரிகளும் திமுக நிர்வாகிகளும்கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆசூர், காந்தளூர், பழங்கனார்குடி, வாழவந்தான் கோட்டை, குண்டூர் கும்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகிறது.

அதேபோல் திருச்சி மாநகராட்சி மண்டலம் அரியமங்கலம் அலுவலகத்தில் நடந்த விழாவில் 23 திருநங்கைகள் உட்பட 491 பேருக்கு இலவச வீட்டு மனைகளை அன்பில் மகேஷ் வழங்கினார்.

இந்த விழாவில் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன்உதவியாளர் சரவணன் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராமன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.