பெண்களை மதிப்பாக நடத்துங்கள் : முசிறி காவல் ஆய்வாளர் அறிவுரை
திருச்சி, ஜூன் 4 வீட்டில் ஆண் பிள்ளைகள் மத்தியில் பெண்களை மதிப்பாக நடத்துங்கள், –
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று முசிறி காவல் ஆய்வாளர் பொதுமக்களுக்கு அறிவுரை.
திருச்சி மாவட்டம், முசிறியில் அந்தரப்பட்டி சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பில் கிராம கண்காணிப்பு குழு மற்றும் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முசிறி காவல் ஆய்வாளர் செல்லத்துரை தலைமை வகித்து குற்ற தடுப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
வீதிகள் தோறும் குற்றங்களை தடுக்கும் வண்ணம் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது அவசியம் கண்காணிப்பு கேமரா அமைப்பதினால் குற்றங்கள் எண்ணிக்கை குறையும் . வீடுகளில் ஆண் பிள்ளைகளை வளர்க்கும் போது பெண் குழந்தைகளை மதித்து நடக்கவும் அவர்கள் முன்பு பெண்களை மதிப்பாக நடத்தவும் வேண்டும் அப்போதுதான்.
வளரும் ஆண் குழந்தைகளுக்கு பெண்கள் மதிக்க தக்கவர்கள் .பெண்கள் பெண் பிள்ளைகளுடன் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற நற்பழக்கம் ஏற்படும். இதன் மூலமே பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்திட முடியும்.
பெண் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.
உதவி ஆய்வாளர் சுஜாதா பெண்களுக்கான விழிப்புணர்வு குறித்தும் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் எழுத்தர் ஆனந்த், நகர்மன்றத் துணைத் தலைவர் சுரேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் முகேஷ், வசந்தகுமார் வழக்கறிஞர் சண்முகம் மற்றும் அந்தரப்பட்டி சாலைபகுதியில் உள்ள பொதுமக்கள்
திரளாக கலந்து கொண்டனர்.