திருச்சி மாவட்டத்திற்கு பசுமை விருது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

0 421
Stalin trichy visit

சென்னை,ஜூன்5 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாருக்கு பசுமை விருது வழங்கினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, தா.மோ.அன்பரசன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ராகுல்நாத், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் ஸ்ரீனிவாஸ்ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரின காப்பாளர் ராகேஷ்குமார், தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியத் தலைவர் எம்.ஜெயந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.