வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக கவனம் : புதிய மாவட்ட ஆட்சியர் பேட்டி

0 258
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 25 திருச்சி  மாவட்டத்தின் 146 ஆவது மாவட்ட ஆட்சியராக வே. சரவணன் இன்று பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் அதிக கவனம் செலுத்தப்படும் குறிப்பாக காமராஜர் நூல நூலகம், டைட்டில் பார்க், ஒலிம்பிக் அகாடமி, ஆசியா கட்டுமான பணிகளில் கவனம் செலுத்தப்படும் மேலும் பொதுமக்கள் எந்த ஒரு தயக்கம் இன்றி என்னை அணுகலாம், திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வரும் மாதங்களில் மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் கோட்டை ரயில் நிலைய பகுதி மேம்பால பணிகள் மாநகராட்சி பணிகள் விரைவாக நடைபெற்று உள்ளது. ரயில்வே பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதனை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் தன்னை சுலபமாக எந்த நேரம் என்றாலும் தொடர்பு கொண்டு தங்களது கோரிக்கைகளை அளிக்கலாம் தகவல்களை பெறலாம் என்றார்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த பொழுது 47 வது வார்டு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுத்துள்ளேன் மக்களின் அத்தியாவசிய அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பட்டா வழங்குவதில் உள்ள தாமதத்தை நீக்குவேன் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.