தண்ணீர் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்

0 170
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 25  மின் மோட்டார் உடன் கூடிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர் தொகுதி மண்டலம் மூன்றின் 16 வது வார்டில் விஸ்வாஸ் நகரில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாநகராட்சி பொது நிதியிலிருந்து நான்கு லட்சத்தி 80 ஆயிரம் மதிப்பீட்டில் மாமன்ற உறுப்பினர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் பைப்புடன் கூடிய தண்ணீர் தொட்டியை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இந்நிகழ்வில்  உதவி ஆணையர் சரவணன் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன்
இணைப் பொறியாளர் ஜோசப் மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் நகர் நலச் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.