40வது வார்டில் பூங்கா அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வி.எச்.பி. மனு
திருச்சி, ஜூன் 27 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு பகுதி வடக்கு இந்திரா நகரில் பூங்காவுக்கென ஒதுக்கபட்ட இடத்தில் முஸ்லீம் மதத்தினர் பள்ளிவாசல் கட்ட முற்பட்டனர் அதை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். மேலும் வருவாய் துறை மூலமாகவும் அரியமங்கலம் மாநகராட்சி மூலமாகவும் காவல் துறை மூலமாகவும் சர்வே செய்து சர்வேயில் பூங்கா இடம் தான் என்று முடிவானது.
இதையடுத்து வி.எச்.பி. திருவெறும்பூர் ஒன்றிய பிரகண்ட செயலாளர் பிரபாகரன் தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்டறிந்தார். இதில் மாநகராட்சி உயர் அதிகாரிகள் இது பூங்கா இடம் தான் என்று கடிதம் கொடுத்தனர். பின்பு கடந்த 22.06.25 அன்று மதியம் சுமார் 50 பேர் கொண்ட முஸ்லிம் மதத்தினர் அந்த பூங்கா இடத்தில் சுத்தம் செய்து தொழுகைக்கு முற்பட்டனர். அதை திருவெறும்பூர் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் வி.எச்.பி. மாவட்ட இணை செயலாளர் அழகு யுவராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சரவணன் சந்தித்து இந்திரா நகரில் பூங்கா இடத்தில் பூங்காவோடு உடற்பயிற்சி நிலையம் ரேஷன் கடை நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.
இதில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் எம்பயர் கணேசன், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் வேங்கூர் கார்த்தி, வாழவந்தான் கோட்டை கிளை தலைவர் இளையராஜா ஆகியோர் மனு அளித்த போது உடன் இருந்தனர்.
இந்நிகழ்வில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் சரவணனுக்கு மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.