மாயமான மூதாட்டி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

0 272
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 30  திருவெறும்பூர் அருகே உள்ள மாணிக்க நகரை சேர்ந்தவர் ரஞ்சன் (55) இவர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர். தற்பொழுது எஸ்பிஐ வங்கியில் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார்.  அவரது தாய்சரஸ்வதி (70)இவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 23ம் தேதி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றுள்ளார். அப்படிச் சென்ற சரஸ்வதி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து பல இடங்களில் தேடியும் சரஸ்வதி கிடைக்கவில்லை.இச்சம்பவம் குறித்து ரஞ்சன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சரஸ்வதியை தேடி வந்த நிலையில் மாணிக்க நகர் எதிரே உள்ள உய்ய கொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள மரத்தில் சரஸ்வதி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு உடனடியாக சரஸ்வதியின் உடலை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.