பெண் குழந்தைகளை காப்போம் – கற்பிப்போம்’ விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

0 21
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 25 பெண் குழந்தைகளை காப்போம்- கற்பிப்போம்’ எனும் விழிப்புணர்வு பிரசார வாகனத்தின் இயக்கத்தை ஆட்சியர் பிரத்திக் தாயள்  கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ‘பெண் குழந்தை களைக் காப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற் றும் பாலின விகிதத்தை மேம்படுத்தும் நோக்கில், எல்இடி விழிப்புணர்வு வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பிரசார வாகனத்தை வழியனுப்பும் நிகழ்வு, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் பிரத்திக் தாயள், இந்தப் பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், ஆட்சியர் கூறியது: இந்த விழிப்புணர்வு வாகனம் முசிறி, தொட்டியம், மணப்பாறை, புள்ளம்பாடி, மருங்காபுரி, வையம்பட்டி, மண்ணச்சநல்லூர், தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் செய்து பள்ளி மாணவர்கள், கிராம மக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை மேற் கொள்ள உள்ளது.
எல்.இ.டி திரை வாகனத்தின் மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத்துறையின் சார்பில் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங் கள், பாலின சமத்துவம் மற்றும், குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் கல்வி முக்கியத்துவம், மாத விடாய் சுகாதாரம் மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பான தக வல்கள் ஒலி, ஒளிக் காட்சியாக திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத் தப்படும் என்றார் ஆட்சியர்.
இந்த நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி மற்றும் சமூக நலத் துறையில் பணியாற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.