மாணவர்கள் நடத்திய இளம் இந்திய நாடாளுமன்ற மாதிரி நிகழ்ச்சி: துரை வைகோ எம்.பி. பங்கேற்பு

0 250
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 30   திருச்சியில், Young Indians (Trichy Chapter) மற்றும் தளிர் இணைந்து  இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் நடத்திய, பல்வேறு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்கள் பங்கேற்ற  இளம் இந்திய நாடாளுமன்ற (Young Indians Parliament)  நிகழ்ச்சியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கலந்து கொண்டு சிறப்பாக பங்காற்றிய மாணவ, மாணவிகளக்கு பாராட்டு பத்திரம் வழங்கினார்.

உண்மையான நாடாளுமன்றத்தை மாதிரி எடுத்தாற்போல பிரதமராக, சபாநாயகராக, எதிர்க்கட்சி தலைவராக, இந்தியா முழுமைக்கான வெவ்வேறு மாநில பிரதிநிதிகளாக மாணவர்களின் சிறப்பான பங்களிப்பு பாராட்டத் தகுந்ததாய் அரங்கேறியது. இதை  குறிப்பிட்டு மாணவர்களையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும்  துரை வைகோ பாராட்டினார்.

மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகள், நாடாளுமன்ற உறுப்பினரின் பணிகள், இந்திய அரசமைப்பு சட்ட விதிமுறைகள் ஆகியவற்றை எளிமையாய் விளக்கினார்.

மதிமுக  தலைவர் வைகோ அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக தலை சிறந்த நாடாளுமன்ற வாதியாக அவர் ஆற்றிய பணிகளில் சிலவற்றை இளம் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தார்.

இறுதியில் மாணவர்களின் கேள்விகளுக்குபதிலளித்தார்.. நிகழ்வு ஏற்பாட்டாளர்களே நிறுத்தச்சொல்லும் அளவிற்கு மாணவர்கள் ஆர்வமுடன் கேள்விகளை எழுப்பினர்.

ஆரவாரமாக நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள்  நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ உடன் சுயபடம் எடுத்துக் கொண்டும், மற்றும்  கையெழுத்து பெற்றுக்கொண்டும், கை குலுக்கி அன்பை பரிமாறிக்கொண்டும் மகிழ்ந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.