முசிறியில் இலவச மருத்துவ முகாம் : சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

0 260
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1  திருச்சி மாவட்டம்,  முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மஹாலில் கனிவு மற்றும் சமயபுரம் சீனிவாசன் மருத்துவ குழு மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமினை நடத்தியது.
முகாமிற்கு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்து அதற்கு உண்டான சிகிச்சை அளிக்கப்பட்டது பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து, சிகிச்சை பெற்று பலன் அடைந்து சென்றனர்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை கனிவு பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் தங்க கோபிநாத் மற்றும் டாக்டர் கார்த்திகா கோபிநாத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.