கடன் பிரச்சனையால் கார் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை

0 170
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1  திருவெறும்பூர் அருகே கடன் பிரச்னையால் கார் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து நவல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மருதமலை மகன் ஐயப்பன் (23). கார் ஓட்டுநர். திருமணமாகாத இவர், சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வந்தார்.கடந்த சில மாதங்களாக நிறைய பேரிடம் ரூ. 10 லட்சம் அளவுக்கு கடன் வாங்கியிருந்தாராம். தொழில் சரியாக இல்லாத நிலையில், வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. ஆனால், கடன் கொடுத்தவர்கள், கடனை தொடர்ந்து கேட்டதாகக் கூறப்படுகிறது. இடையே உடல்நலப் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனஉளைச்சலுடன் காணப்பட்ட ஐயப்பன், அருகிலிருந்த தனது சகோதரி அமிர்தவள்ளி வீட்டில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து  நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு  போலீசார் விரைந்து சென்று ஐயப்பனின் உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.