தி.மு.க இளைஞரணி செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு வீரவரவேற்பு : கட்சியினருக்கு தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் அழைப்பு

0 122
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 27 திருச்சி வரும்  இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  ஸ்டாலினுக்கு  வீரவரவேற்பு திருச்சி தெற்கு மாவட்டக் கழக உடன்பிறப்புகளுக்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்!

நமது கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் , தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (27.06.2026) இன்று மாலை சரியாக ஏழு மணி அளவில் திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார்.  நமது கழகத்தின் செயல்வீரரை, வரவேற்பது நமது கடமையாகும்.

எனவே, திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சாற்பு அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.