சாலையோர பூங்கா: மேயர் திறந்து வைத்தார்

0 180
Stalin trichy visit

திருச்சி ஜூலை 2 திருச்சி மாநகராட்சி 28 வது வார்டில் தினந்தோறும் சாலை மற்றும் தெரு ஓரத்தில் அல்லது சந்திப்புகளில் பொதுமக்களால் குப்பை கொட்டி அசுத்தம் ஆகும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியை சிறிய பூங்காவாக அழகுபடுத்தும் பணியை செய்து வருகின்றனர்
அதன்படி அண்ணாநகர் முதல் குறுக்கு தெரு முதல் இரண்டாம் குறுக்கு தெரு வரை உள்ள பகுதியை அழகுப்படுத்தி பூங்கா அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட
பூங்காவை மேயர் அன்பழகன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பைஸ் அகமது, கமால் முஸ்தபா மற்றும் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், மகளிர் சங்க நிர்வாகிகள், வேதா நிறுவனத்தின் பொறுப்பாளர் அய்யப்பன் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வார்டு மேற்பார்வையாளர் நளினி தலைமையில் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.