திருச்சியில் ஸ்டேன்சாமி சிலை : கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
திருச்சி, ஜூலை 7 திருச்சி மாவட்டம், விரகானூரில் பழங்குடியின மக்களுக்காக போராடிய அருட்தந்தை. ஸ்டேன் சாமி சிலையை சனிக்கிழமை கழக துணைப் பொதுச்செயலாளர் – தி.மு.க நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.இதில் அமைச்சர் அன்பில் மகேஸ், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி தமிழக ஆயர்களின் கூட்டுத் தலைமை ஏற்பாட்டில் நடைபெற்ற சனநாயக எழுச்சி மாநாட்டை திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில் .
இந்த மண் நமக்கு கொடுத்த கொடை ஸ்டேன் சுவாமி, அடித்தட்ட மக்களுக்கு உழைத்த ஒரு பெருமை நாம் இழந்து இருக்கிறோம், இது போன்று இன்னொருவரை நாம் இழந்து விடக்கூடாது என தமிழக முதல்வர் சொல்லியிருக்கிறார். 2017 ஆண்டிலிருந்து ஜனநாயகம் கொடூரமாக தாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. 84 வயதில் ஸ்டேன் சுவாமி சிறையில் அடைக்கிறார்கள். அவர் விட்டு சென்ற பணியை நாம் தொடர வேண்டும். மத்திய அரசிடம் 39 ஆயிரம் கோடி வேண்டும் கேட்டோம் 270 கோடி தான் தருகிறார்கள்.
ஆனால் நாடாளுமன்றத்திற்காக பல கோடி ரூபாய் செலவு செய்தார்கள், செங்கோல் வைத்த மத்திய அரசு செக்யூரிட்டி வைக்கவில்லை. இந்த மாநிலத்திற்கும் இல்லாத ஒரு பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு என்றார்.
தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் அவர்கள் மேடையில் பேசுகையில் …
பழங்குடி மக்கள் தோழன் ஸ்டேன் சுவாமி தன்னலம் கருதாமல் தன்னை முழுமையாக மக்களுக்காக அர்ப்பணித்தவர் தன்னுடைய நெருக்கமானவர் பழங்குடியின மக்களின் பண்பாட்டை வாழ்க்கை சூழழை உணர்ந்தால் தான் அவர்களுக்காக உழைக்க முடியும் நீதித்முறை உட்பட அனைத்தும் கருணையற்ற முறையில் நடந்துக்கொண்டது இறுதிலகாலக்கட்டத்தில் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் ஊறிஞ்சிவதற்கு குழாய் கூட குடிக்க முடியாத நிலையில் இருந்தார் பழங்குடியின மக்கள் சுயமரியாதையோடு வாழ அவர்களுக்கு நிலம் வேண்டும் என்று போராடினார் மனித உரிமை என்பது எல்லாவித உரிமைகளை விட மேலானது இறந்த பிறகும் ஸடேன்சாமி அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு உள்ளது இதன் பிறகாவது அந்த வழக்கை அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.
சிலையை திறந்து வைத்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி.
ஸ்டேன் சாமி தமிழகத்தை கடந்து எங்கெல்லாம் மக்கள் அவர்கள் வாழ்வை மீட்டெடுக்க வேண்டும் என்று போராடுகின்றனரோ அங்கு போய் நின்றவர். ஜார்கண்ட் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்காக போராடியவர் யார் கேள்வி எழுப்பினாலும் அவர்களுக்கு எதிரான கேள்வி என்றல்ல தேசத்திற்கு எதிரான கேள்வி என்று கட்டமைக்கப்படுகின்றது 84 வயதில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பார்கின்சம் நோயால் பாதிக்கப்பட்டவர் கை நடுக்கத்தால் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டார் அதற்காக சிறையில் உள்ள அவருக்கு தண்ணீர் குடிக்க ஒரு ஸ்ட்ரா கூட கொடுக்க முடியாமல் தடுக்கப்பட்டது
யார் எதிராக கேள்வி கேட்டாலும் அவர்கள் தேச துரோகிகள் அல்லது அவர்களை கொலை செய்யும் நிலை உள்ளது மதம், மற்றும் சாதிய ரீதியாக பிரிவிணையை ஏற்படுத்தி அரசியல் செய்யப்படுகின்றது. எந்த சட்டம் வந்தாலும் மாநில மொழியில் இருக்காது அந்த திட்டத்தின் பெயரே எந்த மொழி என்று நமக்கு தெரியாது மொழி ஆதிக்கத்தால் உரிமைகளை பறிப்பது சட்டத்தால் மாநில உரிமைகளும் மக்கள் உரிமைகளும் பிரிக்கப்படுகின்றது
இவற்றை மீட்டெடுக்க தான் நமது முதல்வர் போராடி வருகின்றார் இது மற்றொரு விடுதலை போராட்டம் தலைமுறைக்கான போராட்டம் சுயமரியாதையை விட எதும் பெரிது அல்ல தனி மனித மசோதாவாக மக்களுக்காக போராடுபவர்களை விடுவிக்க தீர்மானம் கொண்டு வருவேன் என்றார்
இறுதியாக சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசும்போது.
கேட்பாறற்றவர்களுக்காக உழைத்தவர் ஜார்கண்ட் பழங்குடியின மக்களுக்காக போராடியவர் அந்ந மக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் அவர்களுக்கு மனித உரிமைகள் உள்ளது, சட்டம் உள்ளது என்று அவர்களுக்கு எடுத்து கூறியவர் இது எப்படி சட்ட விரோதமாகும்
அமித்ஷா அடிக்கடி சொல்கின்றார் நக்சல்களை ஒழிப்போம் என்று நமது பார்வையில் அவர்கள் தோழர்கள் மக்களுக்காக ஆயுதங்களை எடுத்து போராடுகின்றனர் காடுகளை அழித்து, வனவிலங்குகளை அழித்து கார்பெட்களுக்கு கொடுக்க நினைக்கின்றனர் அவர்கள் எங்கள் தோழர்கள் தேர்தலில் விரும்பாதவர்கள், ஆயுதம் ஏந்தினால் தான் புரட்சி என்று போராட்டத்தில் உள்ளனர் அதில் நாம் வேறு படுகின்றோம் நாம் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக முறையை ஏற்கின்றோம் அவர்களோடு தொடர்பு வைத்திருந்தால் என்ன தவறு. ஸ்டேன் சுவாமி மடிக்கணினியை என்ஐஏ கைபற்றினர் ஆனால் அதை ஆய்வு செய்த போது அதில் யோரோ அவருக்கு தெரியாமல் அனுப்பியது உறுதியானது. கம்யூனிஸ்ட்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட்டத்தில் நிர்ப்பவர்கள் என்றார்
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் திரு. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரரபாண்டியண், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.