துறையூர் பிரச்சன்னா வெங்கடாஜலபதி கோவில் திருத்தேர் பாதுகாப்பு வசதி கோரிக்கை
திருச்சி, ஜூலை 7 திருச்சி மாவட்டம் துறையூரில் பிரசன்னா வெங்கடாஜலபதி திருக்கோவிலில் திருத்தேர் பாதுகாப்பு வசதி கோரிக்கை
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில், இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட மலைகோவிலாக விளங்கும் ஸ்ரீ பிரசன்னா வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. மலை மீது உள்ள சுவாமியை தரிசனம் செய்வதற்கு 1200 படிகள் ஏறி செல்ல வேண்டிய இந்த கோவிலில், பக்தர்களுக்கா தார் சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி உற்சவம் நடைபெறும் வைகாசிமாதம் விசாக நக்ஷத்திர தினத்தில் ஆண்டுதோறும் திருத்தேர் பவனி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
தேரோட்டம் காண்பதற்காக கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
தேரோட்டம் நடைபெறும் கிரிவலப்பாதையில் திருத்தேர் பவனி முடிந்த பின் பாதுகாப்பாக தேரை நிலை நிறுத்துவதற்கான தனியான இடமோ, மேற்படி பாதுகாப்பு வசதிகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் திருத்தேர், மீதமுள்ள 364-நாட்களில் வெயிலும் மழையும் போன்ற இயற்கை சீற்றங்களில் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி நிறுத்தப்படுவதால், அதன் நிலைத்தன்மை பாதிக்கப்படுகின்றது.
இதனை கருத்தில் கொண்டு, பக்தர்களும் பொதுமக்களும் இணைந்து, திருத்தேருக்கு பாதுகாப்பான அமைப்பை ஏற்படுத்திட கோரிக்கை விடுத்துள்ளனர்