பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் சலவைத் தொழிலாளர்கள் புகார்
பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு
சலவைத் தொழிலாளர்கள் .கலெக்டரிடம் புகார் மனு
திருச்சி ஜூலை 7
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநிலத் தலைவர் பாலன், பொதுச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் சலவை தொழிலாளர்கள் கலெக்டர் சரவணனிடம் ஒரு புகார் மனு அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ;-
திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் புத்தூர் மேல வண்ணாரப்பேட்டை பகுதியில் 88 ஆயிரத்து 762 சதுர அடி நிலம் எங்கள் சங்கத்துக்கு சொந்தமானது.
இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 17 கோடியாகவும்
இதனை ஒரு தனிநபர் முறைகேடாக ஆக்கிரமித்து கட்டுமானங்களை எழுப்பியுள்ளார்.
மேலும் அந்த தனிநபர் வீட்டுமனையாக அதை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே தாங்கள்
அதனை தடுத்து நிறுத்தி சங்கத்துக்குரிய நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்