பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

0 224
Stalin trichy visit

திருச்சி ஜூலை 7 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 34) இவர் தனது இரு சக்கர வாகனத்தில் கடந்த 4ந் தேதி திருச்சி – புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி
கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து ஆனந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தார். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி ஆனந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.