திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது!

0 418
Stalin trichy visit

திருச்சி மாநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கொத்தமங்கலம் ராமநாதன் என்பவரிடம் இருந்த 350 கிராம் கஞ்சா, பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனியில் கஞ்சா விற்ற அரியமங்கலத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்கிற பிடி பிரபு என்ப விடம் இருந்து 250 கிராம் கஞ்சா, பாலக்கரையில் கஞ்சா விற்ற கீழபுதூரைச் சேர்ந்த அன்பழகன், பாண்டித்துரை, மேகலாமேரி ஆகிய 3 பேரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, அற்புதசாமிபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த நாகேந்திரன் என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

Leave A Reply

Your email address will not be published.