திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிற்சங்கத்தினர்

0 234
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 9  மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் அப்பொழுது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பை திரும்ப பெற வேண்டும் பெட்ரோல், டீசல், கேஸ் ,உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும்.  வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது இந்த வேலை நிறுத்த போராட்டம் தருணமாக வங்கிகள் மத்திய மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது

இந்நிலையில் திருச்சியில் இந்த வேலை நிறுத்த போராட்டமானது நடைபெற்று வருகிறது இந்தப் போராட்டத்தில் சி ஐ டி யு , ஏ ஐ டி யு சி, தொமுச உள்ளிட்ட 13 க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திருச்சி தென்னூர் மகாத்மா காந்தி பள்ளி அருகே இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டோ பேரணியாக சென்று திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார் இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்

Leave A Reply

Your email address will not be published.