இரண்டரை கோடி “வேளாளருக்கு” தனிநலவாரியம் : திருச்சி நடந்த மாநாட்டில் தீர்மானம்

0 204
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 14  திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சங்கங்களின் இணை எழுச்சி மாநாடு திருச்சி பொன்மலையில் உள்ள ஜி-கார்னர் மைதானத்தில் நேற்று  நடைபெற்றது.

மாநாட்டில் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனம் மற்றும் வேந்தர் டாக்டர்.ஐசரிகணேசன்,
பெஸ்ட் ராமசாமி,மருத்துவர் செந்தில், வ உ சி பேரன் சிதம்பரம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் வேளாளர் சங்க வரலாற்று நூலை ஐசரி கணேஷ் வெளியிட்டார் அதனை மருத்துவர் செந்தில் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளாக தமிழகத்தில் வாழும் இரண்டரை கோடி வேளாளர் உட்பிரிவுகளையும் ஒரே பேரில் வேளாளர் என குறிப்பிட்டு அவரவர் உட்பிரிவு ஜாதிப் பெயர்களை இணைத்து அரசாணையை வழங்க வேண்டும் அதாவது சோழிய வேளாளர் என்றால் வேளாளர் சோழியர், வேளாளர் காத்தார், வேளாளர் சைவகம் என்பதாக வழங்க வேண்டும் . மேலும் வேளாளர் ஜாதி யின் உட்பிரிவில் சில உட்பிரிவு பட்டியலில் இடம் பெறாமல் இருக்கிற ஆறுநாட்டு வேளாளர் மற்றும் திருநீற்று வேளாளர் இவர்களை இணைத்து அரசு இதழ் பட்டியலில் வெளியிட வேண்டும்.

முற்பட்ட பிரிவில் உள்ள உட்பிரிவு வேளாளர்களுக்கு அரசு சலுகைகள் கிடைப்பதில்லை, ஆகையால் 40உட்பிரிவு வேளாளர்களையும் பிற்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்புகளில் 18சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும்,

பிற சமுதாயத்திற்கு இருப்பது போல் தமிழகத்தில் பெருவாரியாக வாழும் இரண்டரை கோடி வேளாளருக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும்,

உலகெங்கும் வாழும் வெள்ளாளர் இன மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, வேளாண்மை, வணிகம் வாழ்வு மேம்பட நாம் வெள்ளாளர் வங்கி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் அந்த வங்கியில் ஒவ்வொரு வேளார்களும் தங்கள் பங்களிப்பை தொகையை கொடுத்து அது வேளாளர் மேம்பாட்டுக்காக வழி வகுக்க வேண்டும்,

தமிழகத்தில் வேளாளர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றில் வேளாளர் இளைஞர்களும் மாணவர்களுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் முன்னுரிமை அளித்தல் வேண்டும்,

இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட தங்களது வாழ்வையே தியாகம் செய்த நமது செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் கொங்கின் மைந்தன் தீரன் சின்னமலை கவுண்டர் ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் முழு உருவ சிலை வைக்க வேண்டும்,

கல்விக்காக அரும்பாடு பட்டு ஏழை மாணவர்களை கல்வி கற்க தமிழகத்தில் முதல் முதலாக கல்வி கூட்டங்களை நிறுவிய கொடைவள்ளல் ஐயா பச்சயப்பன் முதலியார் அவர்களின் பெயரை சென்னை பல்கலைக்கழகத்திற்கு வைக்க வேண்டும்,

அரசியல் நோக்கம் கொண்டு மட்டுமே தேவேந்திர குல வேளாளர் சட்டத்தை ஏற்படுத்துகிறார்கள் அதை வேளாளர் சமுதாயம் என்றென்றும் ஏற்கப்படாது,

நமது சமுதாய சொந்தங்கள் பல்வேறு கட்சிகளில் தங்களது பங்கேற்பை கட்சிக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அதரித்து வந்தாலும் மேற்கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றும் கட்சிக்கே வருங்காலத்தில் வெள்ளாளர் சமுதாயம் துணை புரியும் என தெரிவித்துக் கொள்கிறோம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.