திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
திருச்சி, மே 12 துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை புதன்கிழமை (மே 13) மாநகரின் சில இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம், வெல்- 3 மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் 2 ஆகிய நீரேற்று நிலையத்துக்கு கம்பர சம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம், வெல் 3 மற்றும்பெரி யார்நகர்கலெக்டர்வெல்நீரேற்று நிலையம் 2 ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வாநகர், பாரதிநகர், சிவா நகர், ஆனந்தம் நகர், ரெயின்போ நகர், தில்லைநகர், அண்ணா நகர், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்சன், கருமண்டபம், ராமலிங்கநகர், உய்யக்கொண்டான் திருமலை, விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, கல்லாங்காடு, சமுதாயக் காலனி, எம்.எம். நகர் மற்றும் திருவெறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரிநகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர் விவேகனந்தர்நகர் மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் புதன்கிழமை ஒருநாள் வழங்கப்பட மாட்டாது. வியாழக்கிழமை முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.