துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 298
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 17 துவாக்குடி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி  குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதல்வர் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் மாவட்டம் தோறும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நடத்துவதாக திட்டமிட்டு காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் துவக்கிய நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி நகராட்சி பகுதியில் உள்ள வார்டு எண் 5, 6, 11, 12, ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்  துவாக்குடி வ .உ.சி நகரில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்ததுடன் முகாமில் உள்ள 16 துறைகளான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாற்றுத்திறனாளிகள் துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எரிசக்தி துறை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை ஆகிய துறைகளின் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடையே அனைத்து உதவிகளையும் அதிகாரிகளிடம் கூறி கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் மகளிர் நலன் கருதி கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கப்பட்டு வருவதாகவும் இதை தகுதி வாய்ந்த அனைவரும் பெற்று பயனடைய வேண்டும் என்றும் இது மக்களுக்கான சிறப்பு முகாம் என்றும் இதை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்

இந்நிகழ்வில் துவாக்குடி நகர் மன்ற தலைவரும் நகர செயலாளருமான காயம்பு, உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட மேலாளர் டாஸ்மார்க் திருமாவளவன் துவாக்குடி நகராட்சி ஆணையர் பட்டுசாமி திருவரம்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், நகர இளைஞரணி அமைப்பாளர் செல்வம் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.