திருச்சி கிழக்கு தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 608
Stalin trichy visit

திருச்சி, ஜூலை17 திருச்சி மாநகராட்சி கிழக்கு தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை துவக்கி வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .

தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் மாவட்டம் தோறும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நடத்துவதாக திட்டமிட்டு காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் துவக்கிய நிலையில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 17, 18 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஈ.பி ரோடு விறகு ப்பேட்டை அருகில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்ததுடன் முகாமில் உள்ள 16 துறைகளான மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாற்றுத்திறனாளிகள் துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எரிசக்தி துறை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை ஆகிய துறைகளின் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடையே அனைத்து உதவிகளையும் அதிகாரிகளிடம் கூறி கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மேலும் மகளிர் நலன் கருதி கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கப்பட்டு வருவதாகவும் இதை தகுதி வாய்ந்த அனைவரும் பெற்று பயனடைய வேண்டும் என்றும் இது மக்களுக்கான சிறப்பு முகாம் என்றும் இதை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பொதுமக்களிடையே எடுத்துரைத்தார் . இந்நிகழ்வில் நகராட்சி சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு பெயர் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டது மற்றும் வருவாய்த்துறையில் பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி வருவாய் கோட்ட அலுவலர் அருள் மாநகராட்சி உதவி ஆணையர் சாலை தவ வளவன் செயற்பொறியாளர் இப்ராஹிம் துணை மேயர் திவ்யா மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா
மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், சண்முகப்பிரியா, வட்டக் கழகச் செயலாளர்கள் மனோகர், சுப்பிரமணி, சிலம்பரசன், பாண்டியன், மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.