சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கூழ் வார்த்தல்
திருச்சி, ஜூலை 21 திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கூழ் வார்த்தல் ,சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கும் விழா
அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இத்திருக்கோவிலுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர் .
ஆடி மாதம் என்பதால் அம்மன் திருத்தலங்களில் நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம் .
அந்த வகையில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு உகந்த கூழ் படைத்தும் வரும் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கும் திட்டமானது துவங்க உள்ளது, மேலும் வரும் சுமங்கலி பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி , வளையல் ,தாலி கயிறு ,அம்மனின் புகைப்படம் ,அடங்கிய மங்கள பொருட்கள் வழங்கும் திட்டத்தினை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் துவக்கி வைத்தார் .
இந்நிகழ்வில் கோவில் இணை ஆணையர் பிரகாஷ் ,கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சேது லட்சுமணன் ,சுகந்தி ,பிச்சைமணி ,ஆகியோர் உடன் இருந்தனர் .
பக்தர்களுக்கு வழங்கப்படும் மங்களப் பொருட்கள் மற்றும் கூல் தயாரிக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .
சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்கள் மட்டும் ஐயாயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .