பொன்மலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

0 256
Stalin trichy visit

திருச்சி ஜூலை 21 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருடைய தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாய் தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துராஜ்(வயது 40) என்பவர் பொன்மலை மிலிட்டரி காலணியில் இருந்த சிறுமியின் வீட்டில் உள்ளே நுழைந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் சகோதரி பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பராஜை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.